புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் மாலை 4 மணிக்கு புதுவை அண்ணா திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரம் செய்கிறார். கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள்.
புதுவையில் திமுக பதவி வெறியினால் இந்தியா கூட்டணியை முறையாக அமைக்க முடியவில்லை. 30 தொகுதிகளில் கூட கூட்டணியை அமைக்க முடியாத திமுக தமிழகத்தில் மிகப்பெரிய தோல்வியை தழுவும். புதுவையில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.