Jose Charles Martin 
புதுச்சேரி

Puducherry Election | ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

காமராஜர் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட உள்ளார். இதையொட்டி வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.

மாலை மலர்

2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கிய லட்சிய ஜனநாயகக் கட்சி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறது.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க. 10 தொகுதிகளிலும், அ.தி.மு.க. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.கே. 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

அதன்படி காமராஜர் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் போட்டியிட உள்ளார். இதையொட்டி வேட்புமனுவை அவர் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் அவரது மனைவியின் பெயரில் ரூ.597 கோடிக்கு அசையும், அசையா சொத்துகள் உள்ளதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார்.