கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தனது முதல் மாத ஊதியத்தை நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மூலம் தி.மு.க. நகர மன்ற கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார் வழங்கிய காட்சி. 
புதுச்சேரி

முதல் மாத ஊதியத்தை வழங்கிய தி.மு.க. கவுன்சிலர்

நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தனிடம் வழங்கப் பட்டது.தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த முதல் மாதம் மதிப்பூதியம் ரூ.5 ஆயிரத்தை அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினார்.

மாலை மலர்

புதுச்சேரி:

கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 76-வது சுதந்திரதின விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட கோட்டக்குப்பம் நகராட்சி சின்னகோட்டக் குப்பம் 14-வது வார்டு நகர மன்ற கவுன்சிலர் ஸ்டாலின் சுகுமார், நகர மன்ற உறுப்பி னர்களுக்கு வழங்குவதாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் அறிவித்த முதல் மாதம் மதிப்பூதியம் ரூ.5 ஆயிரத்தை அரசு பள்ளியின் வளர்ச்சிக்காக வழங்கினார்.

இதனை கோட்டக்குப்பம் நகர மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி மூலம் பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தனிடம் வழங்கப் பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் ஜீனத்பிவி முபாரக் மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.