பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவித்த காட்சி. 
புதுச்சேரி

பக்தர்களுக்கு ருத்ராட்சம் அணிவிப்பு

ஆடி செவ்வாய் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.இதில் திரளானவர்கள் கலந்து ருத்ராட்சம் அணிந்து கொண்டனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை அய்யங்குட்டி பாளையத்தில் இயங்கி வரும் மார்க்கண்டேயர் திரு மடம் சார்பில் புதுவை ஆதீனம் சந்திரசேகர சாமிகள் முன்னிலையில் வளர்பிறை பிரதோஷம் மற்றும் ஆடி செவ்வாய் முன்னிட்டு பெரியநாயகி அம்மன் உடனுறை அரசியலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றது.

தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் ஓதி நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ருத்ராட்சம் அணிவிக்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து ருத்ராட்சம் அணிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மடத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.