ஜிம்
புதுச்சேரி

தசையை வேகமாக வளர்க்க ஜிம்மில் உடற்பயிற்சி வீரர்களுக்கு ஆபத்தான ஊசி: 3 பேர் கைது

உடம்பை வேகமாக பெருசாக்க, தசையை வேகமா வளர்க்க ஸ்டீராய்டு ஹார்மோன் ஊக்க மருந்து.

புதுவை அரியாங்குப்பம், புதுவை- கடலூர் பிரதான சாலையில் ஜிம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

ஊக்க மருந்து ஊசி

இந்த ஜிம்மில் உடற்பயிற்சி பெறும் வீரர்களுக்கு உடம்பை வேகமாக பெருசாக்க, தசையை வேகமா வளர்க்க ஸ்டீராய்டு ஹார்மோன் ஊக்க மருந்து ஊசி மருந்து போடப்படுவதாக அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் ஜிம்மில் அதிரடி சோதனை நடத்தினர்.

ஆபத்து

அப்போது ஜிம்மில் பயிற்சி பெறுவோருக்கு மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ஊசியை செலுத்துவது தெரியவந்தது. இதனையடுத்து ஜிம் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹார்மோன் கோளாறு ஏற்படும்

அவர்களிடம் இருந்து 4 ஊசி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டாக்டர்கள் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் இந்த ஸ்டீராய்டு ஹார்மோன் ஊசியை செலுத்தினால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு, ரத்த அழுத்தம், மாரடைப்பு, ஹார்மோன் கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஊசி எங்கிருந்து வாங்க பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடற்பயிற்சி கூடங்களில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஊக்க மருந்தை சட்டவிரோதமாக ஆன்லைனில் வாங்கி விற்பனை: போதை தடுப்பு பிரிவு போலீசார் கண்காணிக்க வலியுறுத்தல்

புதுவையில் உள்ள உடற்பயிற்சி கூடங்களில் உடலின் திறனை தற்காலிகமாக அதிகரிப்பதற்காக மருந்தினை தவறாகப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக போதை தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மருத்துவத்துறையில் இந்த ஊக்க மருந்து இதயத் துடிப்பை ஊக்குவிக்கவும், அறுவை சிகிச்சையின் போது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு அவசரகால மருந்தாகும். இது உடலில் நோராட்ரினலின் அளவை அதிகரித்து, இதயத்தின் செயல்பாட்டை தீவிரப்படுத்துகிறது.

மருத்துவரின் முறையான கண்காணிப்பின்றி இந்த மருந்தினை எடுத்துக்கொள்வது இதய நோய்கள், பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், உயிருக்கே ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக்கூடும் மருந்தாகும்.

இந்த மருந்தை உடற்பயிற்சி கூடங்களில் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக இந்த மருந்து மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்குவதில்லை. ஆனால் ஒரு சிலர் இதனை தவறாக பயன்படுத்த ஆன்லைன் மூலம் வாங்கி சட்ட விரோதமாக விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். உடனே இதனை தீவிரமாக கண்காணித்து இந்த ஊக்கமருந்து ஊசிகளை விற்பனையில் ஈடுபடும் கும்பலை அதிரடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT