இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புதுவை மாநில குழு கூட்டம் எல்லை. சிவகுமார் தலைமையில் நடைபெற்றது.
தேசிய குழு முடிவுகள் மற்றும் அரசியல் நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் ஆன்னி ராஜா பேசினார். நடைபெற்ற வேலைகள், சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில செயலாளர் சலீம் பேசினார்.
கூட்டத்தில் தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னய்யா, நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நாரா. கலைநாதன், சுப்பையா, அந்தோணி, ரவி, எழிலன், ஜீவானந்தம், மாநில குழு உறுப்பினர்கள் ஹேமலதா, தசரதா, ஜீவானந்தம், துரை செல்வம், பெருமாள், மூர்த்தி, ரவிச்சந்திரன், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ், திமுக கட்சிகள் மேற்கொண்ட அதிகார போட்டி மனநிலை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த நிலையில் இருந்த பாஜக, என்ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு காங்கிரஸ், திமுக கூட்டணியின் இந்த அதிகார போட்டி பெரும் சாதகமான நிலைமையை உருவாக்கியது. திமுக
என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மீண்டும் உருவாகவும் வழிவகுத்தது.
* மீண்டும் ஆட்சி பொறுப்பு ஏற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து தொடர்ச்சியாக மக்கள் நல போராட்டங்களை முன்னெடுத்து செல்வோம்.
* புதுவையில் போலி மருந்து தயாரிப்பு வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்தி மொழி திணிப்பை வலியுறுத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கைவிட வேண்டும். புதுவை மாநில கல்வி வாரியத்தை அரசு செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.