புதுச்சேரி

இந்தியா கூட்டணியில் தொடரும் குழப்பம்: புதுவையில் ராகுல்- ஸ்டாலின் பிரசாரம் செய்வார்களா?

காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதிகளில் திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் புறக்கணித்து வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 16, திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்று என தொகுதிகளை பிரித்தனர்.

ஆனால் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உழவர்கரை, காலாப்பட்டு, ராஜ்பவன், திருபுவனை, காரைக்கால் தெற்கு, மங்கலம் ஆகிய தொகுதிகளில் நட்புரீதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதனால் புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சிதறியுள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி உழவர்கரை தொகுதியிலும், மார்க்சிஸ்ட்டு லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டையிலும், விடுதலை சிறுத்தைகள் உழவர்கரை, ஊசுடு, நெட்டப்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதனால் கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்கள் தொகுதிகளில் திமுகவினர் பிரசாரத்தில் ஈடுபடாமல் புறக்கணித்து வருகின்றனர். இந்த குழப்பத்தால் காங்கிரஸ் எம்பி ராகுல், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் புதுவைக்கு பிரசாரத்துக்கு வருவார்களா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் சமீபத்தில் வெளியான தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரரசார திட்டத்தில் புதுச்சேரி இடம்பெறவில்லை.