புதுச்சேரி

சனீஸ்வரருக்கு எள் தீபம் ஏற்றி முதலமைச்சர் ரங்கசாமி வழிபாடு

சனி பகவானுக்கு 2 பெரிய எள் விளக்குகள் ஏற்றி வணங்கினார்.

வைகாசி மாதம், பரணி நட்சத்திரத்தில் சனி பகவான் அவதரித்தார். இதனையொட்டி, 30 ஆண்டுகளுக்கு பிறகு வைகாசி மாதம், பரணி நட்சத்திரம், அமாவாசை தினத்தில் சனிக்கிழமை நேற்று வந்ததால், சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புதுவை முதலமைச்சர் ரங்கசாமி, நேற்று இரவு சாரம் சுப்ரமணியர் கோவில் தேவஸ்தானத்தில் உள்ள முத்து விநாயகருக்கு 2 நெய் விளக்கு, சுப்ரமணியருக்கு 6 நெய் விளக்கு, கோவிலில் வன்னி மரத்தின் கீழ் மேற்கு பார்த்த நிலையில், தனி சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு 2 பெரிய எள் விளக்குகள் ஏற்றி வணங்கினார்.

முன்னதாக சனி பகவானுக்கு கோவில் சிவாச்சார்யார்கள் சிவராமன், கார்த்திகேயன் ஆகியோர் அபிஷேகம் செய்தனர். நிகழ்ச்சியில், ஆலய நிர்வாக அதிகாரி பொன் நீலக்கண்டன் மற்றும் தணிகைவேல் குமார், பொன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.