புதுச்சேரியில் அரசு பள்ளிகள் வரும் ஜூன் 1-ந்தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 5ந் தேதிகளில் திறப்பதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை மாணவர் நலன் கருதி தள்ளி வைக்க திமுக, அதிமுக, மாணவர் அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இச்சூழலில் பள்ளிகள் திறப்பை ஜூன் 4-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.