புதுச்சேரி

தேசிய பேட்மிட்டன் போட்டியில் முதல் இடம்பெற்ற புதுவை வீரருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி வாழ்த்து

இந்திய அளவில் தேர்வான 13 வீரர்களில் ரேங்க் 1 பெற்று புதுவைக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

பேட்மிட்டன் அசோசியேசன் ஆப் இந்தியா சார்பில் அகில இந்திய அளவிலான பேட்மிட்டன் போட்டி நடந்தது.

போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கிய புதுச்சேரி மாணவர் பிரஜன் இந்திய அளவில் முதல் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

அவருக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்திய அளவில் தேர்வான 13 வீரர்களில் ரேங்க் 1 பெற்று புதுவைக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளார். சாதனை வீரர் பிரஜன் தனது பதக்கம், விருது மற்றும் சான்றிதழ்களுடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.