புதுச்சேரி

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கு- குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுச்சேரி சிறுமி படுகொலை வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

மாலை மலர்

புதுவை முத்தியால் பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதத்தில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது19), விவேகானந்தன்(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிக்கையை முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.

குற்றப்பத்திரிகையை கிழக்கு கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தாக்கல் செய்து வருகின்றனர்.