கோப்பு படம். 
புதுச்சேரி

மல்யுத்த வீரர்களை மத்திய பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது

மகளிர் காங்கிரஸ் குற்றச்சாட்டுகாங்கிரஸ் மகளிர் அணி போராட தயங்காது.

புதுச்சேரி:

புதுவை மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

விளையாட்டில் வெற்றிகளை குவித்து நாட்டுக்கு பெருமை சேர்க்கும் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு விசாரணைக்குக்கூட பா.ஜனதா முன்வராதது அதிர்ச்சியளிக்கிறது.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தது ஏற்கத்தக்கதல்ல. இதன் மூலம் பெண்களுக்கு உரிய மரியாதை, பாதுகாப்பு இல்லை என்பதை இச்சம்பவம் காட்டுகிறது. மல்யுத்த வீராங்கணை களுக்கு உரிய நீதி கிடைக்கா விட்டால், காங்கிரஸ் மகளிர் அணி போராட தயங்காது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.