புதுச்சேரி

போலி மருந்து தயாரிப்பு வழக்கில் 5 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு

புதுவை, தமிழகத்தின் பூத்துறையில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தி ரூ.6 கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முதல்கட்டமாக சிறையில் உள்ள பிரபாகரனை காவலில் எடுத்து எந்த நாடுகளுக்கு? எந்தெந்த மாநிலங்களுக்கு போலி மருந்துகள் கடத்தப்பட்டது? என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

புதுவை குருமாம்பேட்டில் இயங்கி வந்த மெடினோக் ஹெல்த் கேர் நிறுவனத்தில் போலி மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்கள், இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புகார்

இதுகுறித்து சென்னையை சேர்ந்த ராஜ்குமார் புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். புதுவை, தமிழகத்தின் பூத்துறையில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தி ரூ.6 கோடி மதிப்பிலான போலி மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலி மருந்து தொழிற்சாலை நடத்திய புதுவை சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபாகரன்(48) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

வழக்கு

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி ஷாலினிசிங் உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். சண்முகாபுரத்தை சேர்ந்த பிரபாகரன், சென்னையை சேர்ந்த வாலிமுத்து, ஜெய்கணேஷ், சீனுமுகமது, கடலுார் விக்னேஷ் ஆகிய 5 பேர் மீது காப்புரிமை சட்டம் 1957ன் 63,65வது பிரிவுகள் பிஎன்எஸ் பிரிவு 276, 318(4), 123, 336(2), 3(5) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதல்கட்டமாக சிறையில் உள்ள பிரபாகரனை காவலில் எடுத்து எந்த நாடுகளுக்கு? எந்தெந்த மாநிலங்களுக்கு போலி மருந்துகள் கடத்தப்பட்டது? என விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.