திருக்கனூர் பகுதியில் கே.ஆர்.பாளையத்தில் ஒரு காலி இடத்தில் தானாக வளர்ந்த கஞ்சா செடியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த திருக்கனூர் அருகே காட்டேரிக் குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன், தனது வீட்டில் உள்ள ஒரு பூ ஜாடியில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காட்டேரிக் குப்பம் போலீசார் மற்றும் போதைபொருள் ஒழிப்புத் துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பூ ஜாடியில் இருந்த கஞ்சா செடியை வேறோடு பிடுங்கி அழித்தனர். சிறுவன் மீது வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து திருக்கனூர் பகுதியில் கே.ஆர்.பாளையத்தில் ஒரு காலி இடத்தில் தானாக வளர்ந்த கஞ்சா செடியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.