நல்லவாடு பகுதியில் நடந்த விழிப்புணர்வு வாகன யாத்திரை நிகழ்ச்சியில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட காட்சி. 
புதுச்சேரி

நல்லவாடு பகுதியில் விழிப்புணர்வு வாகன யாத்திரை

சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்புவிழிப்புணர்வு வாகன யாத்திரை நல்லவாடு மீனவ கிராம பகுதியில் நடந்தது.

புதுச்சேரி:

புதுச்சேரி அரியாங் குப்பம் கொம் யூன் பஞ்சாயத்து சார்பில் மணவெளி தொகுதியில் மத்திய அரசின் திட்டங் களை மக்களிடையே கொண்டு செல்வதற்காக நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற கருப்பொருளை உள்ளடக்கிய விழிப்புணர்வு வாகன யாத்திரை நல்லவாடு மீனவ கிராம பகுதியில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டார். இந்த விழிப்புணர்வு வாகன யாத்திரையில் மத் திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட 17 கிராமப்புற மக்களுக்கான திட்டங்களையும், நகர்ப்புற மக்களுக்கான திட்டங் களையும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடத்தப்பட்டது.

பின்னர் திட்டங்களில் பயன டைந்த சிறந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் சபா நாயகர் ஏம்பலம் செல்வம் பரிசு வழங்கினார். தொடர்ந்து பொது மக் களுக்கான மருத்துவ முகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், அதி காரிகள், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.