அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு புதிய பொக்லைன் எந்திரத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் முன்னிலையில் செல்வகணபதி எம்.பி. வழங்கிய காட்சி. 
புதுச்சேரி

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு புதிய பொக்லைன் எந்திரம்

செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.புதிய பொக்லைன் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய பொக்லைன் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டு ரூ.31.58 லட்சம் மதிப்பிலான பொக்லைன் எந்திரத்தை கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்தார்.

உதவி பொறியாளர் நாகராஜன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜனதா தொகுதி தலைவர் செல்வகுமார், கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, சுரேஷ், அகிலன், வாகன மேற்பார்வையாளர் மற்றும் பண்டக காப்பாளர் செழியன், டைனோடெக் மேலாளர் ஆரிப் பாஷா, புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT