புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்த போது எடுத்த படம். 
புதுச்சேரி

புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா

மருத்துவக் கல்லூரிகளில் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகள் மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஜிப்மர் உள்ளிட்ட 5 மருத்துவக் கல்லூரிகளில் 17 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கான பாராட்டு விழா புனித பேட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாளர் பிரடரிக் ரெஜிஸ் மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் மருத்துவ இயக்குனர் ரீட்டா பிரடரிக், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, பள்ளியின் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.