புதுச்சேரி

முதுநிலை பல் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புதுவையை சேர்ந்த எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.ஆயிரத்து 500. இதர பிரிவினர் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.

புதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில் எம்டிஎஸ் முதுநிலை பல் மருத்துவ படிப்புகளில் சேர சென்டாக் நிர்வாகம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.

முதுநிலை பல் மருத்துவ இடங்களில், அரசு ஒதுக்கீடு, அகில இந்திய மேலாண்மை ஒதுக்கீடு, என்ஆர்ஐ இடங்களுக்கு மாணவர்கள் தனித்தனியே விண்ணப்பிக்கலாம். www.centacpuducherry.in என்ற ஆன்லைனில் வரும் 10ம் தே தி மாலை 5 மணி வரை விண்ணப்பம் பெறப்படும்.

புதுவையை சேர்ந்த எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மாணவர்கள் ரூ.ஆயிரத்து 500. இதர பிரிவினர் ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். நிர்வாக இடங்களுக்கு ரூ.5 ஆயிரம், என்ஆர்ஐ, என்ஆர்ஐ ஸ்பான்ஸ்சர்டு இடங்களுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும்.

புதுவை மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லுாரியில், அரசு ஒதுக்கீடாக 9, அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 என மொத்தம் 19 இடங்கள் உள்ளன. வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீடாக 23, மாகே பல் மருத்துவ கல்லுாரியில் அரசு ஒதுக்கீடாக 21 இடங்கள் உள்ளன.

இதன்படி அரசு ஒதுக்கீட்டில் 53, அகில இந்திய ஒதுக்கீட்டில் 10 என மொத்தம் 63 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. மாணவர்கள் சந்தேகங்களுகு்கு 0413-2655570 அல்லது 2655571 என்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT