கோப்பு படம். 
புதுச்சேரி

முதுநிலை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மாலை மலர்

புதுச்சேரி:

மத்திய சுகாதார அமைச்சகம் எம்.பி.பி.எஸ். இன்டர்ன்ஷிப் கட் ஆப் தேதியை ஆகஸ்ட்டு 11-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. இதையடுத்து இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்கள் முதுநிலை படிப்பில் சேர புதுவை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இன்று 11-ந் தேதி முதல் 13-ந் தேதி மாலை 6 மணி வரை எம்.டி, எம்.எஸ். படிப்புகளுக்கு சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே எம்.டி, எம்.எஸ். முதுநிலை படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த 499 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்து 370 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த தகவலை சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ர கவுடு தெரிவித்துள்ளார்.