சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் முன்கூட்டியே கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வருகிற 7-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை 4 நாள்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக ஏற்கெனவே அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது, இந்த விடுமுறை 6-ந்தேதி முதல் அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிகளுக்கான விடுமுறை 5 நாள்களாக உயர்ந்துள்ளது.
மேலும், சிபிஎஸ்இ வாரியத்தின் பொதுத்தேர்வுகள் எழுதுவோர் குறிப்பிட்ட நாளில் பட்டியலிடப்பட்டிருந்தால் அவர்கள் அந்தத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களில் எந்த மாற்றறமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.