புதுச்சேரி

புதுச்சேரி ஜிப்மரில் நாளை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என அறிவிப்பு

ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிப்புபுதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது

ரம்ஜான் பண்டிகையையொட்டி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை (ஏப்ரல்.11) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில், அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பெருமளவிலான மக்கள் பலனடைகின்றனர்.

இந்நிலையில், ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு நாளை மட்டும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட உள்புற நோயாளிகள் பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என்று ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.