புதுச்சேரி

அனைத்து போலீசாரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்- போக்குவரத்து சீனியர் எஸ்பி உத்தரவு

அறிவுறுத்தல்கள் பின்பற்றாதது குறித்து எஸ்பிக்கள், காவல்நிலைய அதிகாரிகள், இதர பொறுப்பாளர்களிடம் இருந்து வாராந்திர அறிக்கை தரவேண்டும்.

புதுவை போக்குவரத்து சீனியர் எஸ்.பி. திவ்யா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் அனைத்து போலீசாரும் தங்களது சொந்த அல்லது அலுவல் ரீதியான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும்போது தவறாமல் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என சுற்றறிக்கை ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும், சில போலீசார் இன்னும் அணியவில்லை. அனைத்து போலீசாரும் ஹெல்மெட் அணிவதை கண்டிப்பாக அனைத்து எஸ்எஸ்பிக்களும் உறுதி செய்யவேண்டும். தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் பணிக்கு வரும்போது ஹெல்மெட் அணிந்துள்ளார்களா என்பதை சரிபார்க்க வேண்டும்.

இதுதொடர்பான அறிவுறுத்தல்கள் பின்பற்றாதது குறித்து எஸ்பிக்கள், காவல்நிலைய அதிகாரிகள், இதர பொறுப்பாளர்களிடம் இருந்து வாராந்திர அறிக்கை தரவேண்டும். இதை திங்கள்கிழமை தோறும் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.