கோப்பு படம். 
புதுச்சேரி

தொடக்கபள்ளி ஆசிரியர்களுக்கு வயது தளர்வு அளிக்க வேண்டும்

மாணவர் கூட்டமைப்பு வலியுறுத்தல் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் வயது தளர்வு அளிக்கவில்லை.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் தொடக்கப்பள்ளி ஆசிரிய ருக்கான பணி நியமன அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் வயது வரம்பு, ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. 10 ஆண்டுக்கு பிறகு நிரப்பப்படும் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி நியமனத்தில் வயது தளர்வு அளிக்கவில்லை.

இதனால் பலர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் 6-வது ஊதிய குழுவை பின்பற்றி பணிநியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.

எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து வயது தளர்வு, சீனியாரிட்டி, 7-வது சம்பளக்குழு பரிந்து ரையின் படி புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.