புதுச்சேரி

காரைக்காலில் விபத்து: தனியார் பள்ளி ஆசிரியை காயம்

இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை.மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது.

புதுச்சேரி:

காரைக்கால் ஒப்பிலார் மணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி பாலசுபலட்சுமி (வயது 39). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இரவு இவர் காரைக்கால் காமராஜர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், தனது ஸ்கூட்டிக்கு பெட்ரோல் போட்டு விட்டு, மகன் திவ்யேஷ் கார்திக் (15), உறவினர் மகன் சரவண ப்பிரியன் (17) ஆகியோ ருடன் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். காரை க்கால் காமராஜர் சாலை கென்ன டியார் வீதி சந்திப்பில் சென்ற போது எதிர் திசையில் மற்றொரு மோட்டார் சைக்களில் வந்த அர்ஷாத் (19) என்பவர் மோதியதில், இருதரப்பும் தடுமாறி சாலையில் விழுந்தனர்.

இதில், பாலசுப லட்சுமியின் 2 பற்கள் உடைந்து போனது. மேலும், கை, கால், மூக்கிலும் காயம் ஏற்பட்டது. அர்ஷாத்துக்கு கையில் காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த பாலசுபலட்மியை, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து காரைக்கால் போக்குவரத்து போலீ சாரிடம் பாலசுபலட்மி புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஷாத்தை விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT