ரூ.12.18 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்த காட்சி. 
புதுச்சேரி

பாகூரில் ரூ.12.18 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி

செந்தில்குமார் எம்.எல்.ஏ., இயக்கி வைத்தார்கமலா நேரு திருமண மண்டபம் அருகே ரூ.12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் மின் துறை சார்பில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது.

மாலை மலர்

புதுச்சேரி:

பாகூர் காமராஜர் நகர் பகுதியில் அடிக்கடி குறைந்தழுத்த மின் பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இப்பிரச்சினையை சரி செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால் பாகூர் கமலா நேரு திருமண மண்டபம் அருகே ரூ.12 லட்சத்து 18 ஆயிரம் செலவில் மின் துறை சார்பில் புதிய மின்மாற்றி நிறுவப்பட்டது. இந்த மின்மாற்றியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து இயக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மின் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் சக்திவேல், இளநிலை பொறியாளர் பிரபுராம், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.