கோப்பு படம். 
புதுச்சேரி

இன்ஸ்டாகிராமில் அவதூறு பரப்பிய மாணவர் மீது வழக்கு பதிவு

இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியும் அகமதும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலை மலர்

புதுச்சேரி:

புதுவை காலாப்பட்டு உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படித்து வரும் பெண்ணும், எம்.எஸ்.சி. படித்து வரும் கேரளாவைச் சேர்ந்த அகமத் என்ற மாணவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அகமத் அவரது இன்ஸ்டாகிராமில் அந்த மாணவியுடன் எவ்வாறெல்லாம் பழகினார் என்பது குறித்து தவறான தகவல்களை பரப்பி உள்ளார்.

இதுகுறித்து புதுவை நீதிமன்றத்தில் அந்த மாணவி வழக்கு தொடுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காலாப்பட்டு போலீசார் மாணவர் அகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியும் அகமதும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.