புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தல் ஒட்டு பதிவு நாளை வியாழக்கிழமை நடக்கிறது.
தேர்தல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் முள்ளோடை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியினை பார்வையிட்டு அனைவரும் விழிப்புடன் பணியாற்றுமாறும் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் 35 சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுமாறும் அறிவுறுத்தினார்கள்.
மேலும் வாகன சோதனைகளை தீவிரப்படுத்தும் படியும் அங்கு பணியில் உள்ளவர்களை கேட்டுக்கொண்டார்கள். கடைசி 72 மணி நேர தீவிர கண்காணிப்பிற்காக கூடுதலாக 36 பறக்கும் படைகளும், 30 இரு சக்கர வாகன பறக்கும் படைகளும் பணியமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மாவட்ட தேர்தல் அதிகாரி தொடர்ந்து, பாகூர் மற்றும் குருவிநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் தீவிர ஆய்வில் ஈடுபட்டார்கள். இந்த ஆய்வின் போது காவல்துறை மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.