கைதான வாலிபர்களை படத்தில காணலாம். 
புதுச்சேரி

கஞ்சா விற்ற 2 வாலிபர் கைது

அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து 2யும் சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி:

உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முத்தியால் பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த கிரிகேஷ், (வயது 22) சாரம் சக்தி நகரை சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.11,500-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 2யும் சிறையில் அடைத்தனர்.