புதுச்சேரி

புதுவை மீனவர்கள் வலையில் சிக்கிய 150 கிலோ பால் சுறா மீன்- எண்ணெய் தயாரிக்க குஜராத்திற்கு அனுப்பி வைப்பு

மருத்துவ பயன்பாடு கொண்ட இந்த பால் சுறா மீனில் இருந்து எடுக்கப்படும் மீன் எண்ணெய் மருந்து தயாரிப்புக்கு பயன்படுவதால், அதனை மீனவர்கள் குஜராத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மீன்பிடி தடை காலம் முடிந்து ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.

செவ்வாய்கிழமை மீன்பிடிக்க சென்ற ஒரு குழு மீனவர்களுக்கு டன் கணக்கில் கவலை மீன்கள் கிடைத்தன. மற்றொரு குழுவினரின் வலையில் 150 கிலோ எடை கொண்ட பிரமாண்ட பால் சுறா மீன் சிக்கியது.

மருத்துவ பயன்பாடு கொண்ட இந்த பால் சுறா மீனில் இருந்து எடுக்கப்படும் மீன் எண்ணெய் மருந்து தயாரிப்புக்கு பயன்படுவதால், அதனை மீனவர்கள் குஜராத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மீன்பிடி தடைக்கு பிறகு மீனவர்களின் வலைகள் நிரம்பி வழிவதால் கடலோர பகுதிகளில் வியாபாரமும், மகிழ்ச்சியும் அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT