புதுச்சேரி

புதுச்சேரியில் 12,591 தபால் வாக்குகள் பதிவு

புதுச்சேரியில் நாளை காலை 7 மணிக்கு அனைத்து ஓட்டுச்சாவடியிலும் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது.

புதுவை சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடக்கிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் 30 தொகுதிகளிலும் மொத்தம் ஆயிரத்து 99 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் 34 தேசிய கட்சி வேட்பாளர்கள், 63 மாநில கட்சி வேட்பாளர்கள், 80 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத வேட்பாளர்கள், 117 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

நாளை காலை 7 மணிக்கு அனைத்து ஓட்டுச்சாவடியிலும் ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் பதிவான தபால் வாக்குகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் மூத்த குடிமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்பட மொத்தம் 12,591 வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் வரும் சட்டம்னறத் தேர்தலில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.