புதுச்சேரி

அமித்ஷா பங்கேற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் அடுத்தடுத்து மயக்கம்- 10 பேர் மருத்துவமனையில் அனுமதி

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் மயக்கமடைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை அணிவகுப்பின்போது வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று புதுச்சேரிக்கு வருகை தந்தார்.

புதுவை காவல்துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பங்கேற்றுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், அமைச்சர் அமித்ஷாவுக்கு காவல் துறையின் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

வண்ணக்கொடி விருது

புதுச்சேரி கோரிமேட்டில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை அமித்ஷா வழங்கி கவுரவிக்கிறார்.

புதுவையில் அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அமித்ஷா தேசியக்கொடி பேரணியை தொடங்கி வைக்கிறார்.

பாதுகாப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையை ஒட்டி புதுச்சேரியில் டிரோன் பறக்கத்தடை, போக்குவரத்தில் மாற்றம், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மயக்கம்

புதுச்சேரியில் காவல்துறை அணிவகுப்பின்போது பெண் காவலர்கள் உள்ளிட்ட 10 பேர் மயக்கமடைந்தனர்.

காவல்துறை அணிவகுப்பின்போது வெளியால் மயக்கமடைந்த காவலர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.