செய்திகள்

கவுசல்யாவின் தாய் உள்பட மூவர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு: அரசு வழக்கறிஞர்

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் உள்பட மூவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் சங்கர நாரயணன் கூறியுள்ளார்.

மாலை மலர்

திருப்பூர்:

உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் கூறியதாவது, “

இந்தியாவிலேயே ஆணவ கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறை, தீர்ப்பின் முழு விபரங்கள் கிடைத்த பின்னர் மூவர் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்” என்று கூறினார்.