தமிழக அரசு 
செய்திகள்

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

சென்னை:

நாங்குனேரி, விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளில் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக வரும் 21-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு, இந்த இரு தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.