செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருவெண்ணைநல்லூர் அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிகுடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திருவெண்ணைநல்லூர்:

திருவெண்ணைநல்லூர் அருகே அரும்பட்டு ஊராட்சியில் உள்ள ஆத்திப்பட்டு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 6 மாதமாக சீரான முறையில் குடிநீர் விநியோகம் இல்லை.

இது குறித்து ஆத்திப்பட்டு கிராம மக்கள் பலமுறை திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை காலிகுடங்களுடன் ஆத்திப்பட்டு ரெயில்வே கேட் அருகே திரண்டனர். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது உடனே குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விரைவில் பானை உடைக்கும் போராட்டம் நடத்தப்படும் என கோ‌ஷங்களை எழுப்பினர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.