ஊர்க்காவல் படை வீரர் செல்வராஜ் 
செய்திகள்

பெண் குளிப்பதை ரகசியமாக பார்த்து ரசித்த ஊர்க்காவல்படை வீரருக்கு சரமாரி அடி

பெண் குளிப்பதை ரகசியமாக பார்த்து ரசித்த ஊர்க்காவல்படை வீரரை பொதுமக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

வில்லியனூர்:

அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 26). ஊர்க்காவல்படை வீரர். இவர் சேதராப்பட்டு போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு பணி முடிந்து செல்வராஜ் இன்று காலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார்.

ஒதியம்பட்டு காசிவிசுவநாதர் நகரில் வந்த போது ஒரு வீட்டில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டு இருப்பதை செல்வராஜ் பார்த்தார்.

உடனே அவர் மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு மறைவில் நின்று பெண் குளிப்பதை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார்.

ஏதேச்சையாக இதை பார்த்து விட்ட அந்த பெண் அலறல் சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து செல்வராஜை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவரை சரமாரியாக தாக்கி வில்லியனூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செல்வராஜ் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோல் அரியாங்குப்பம் பகுதியில் பெண் குளிப்பதை ரசித்து பார்த்த போது அவரை அப்பகுதி மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

ஆனால், இந்த சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனாலும், செல்வராஜ் இந்த பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து அவர் பெண்கள் குளிப்பதை ரசித்து பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT