செய்திகள்

கமலா மில் தீ விபத்து எதிரொலி: ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிரடியாக அகற்றும் மாநகராட்சி

மும்பை கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள உணவு விடுதிகளை மும்பை மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர்.

மாலை மலர்

மும்பையில் பல உணவு விடுதிகள் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ளதாக மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி பல குழுக்கள் அமைத்தனர். அவர்கள் சரியான ஆவணங்கள் இல்லாமல் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

நேற்று மும்பை கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கமலா மில்லில் உள்ள இரண்டு உணவு விடுதிகள் மற்றும் ராகுவன்ஷி மில்லில் உள்ள மூன்று உணவு விடுதிகளை இடித்தனர். இந்த உணவு விடுதிகளிடம் போதுமான ஆவணங்கள் இல்லை. அதனை உறுதி செய்த பிறகே கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தேரி பகுதியில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள உணவு விடுதிகளும் அகற்றப்படும் என மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.