செய்திகள்

பாகிஸ்தானில் பெண் எம்.பி. மீது தக்காளி, முட்டைகள் வீசி தாக்குதல்

பாகிஸ்தான் பெண் எம்.பி. ஆயிஷா குலாலாய் மீது தக்காளி மற்றும் முட்டைகளை வீசி தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #pakistan #AyeshaGulalai

பாகிஸ்தானில் இந்த மாதம் தொடர்ச்சியாக அரசியல் தலைவர்கள் தாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாப் செரீப் மற்றும் உள்துறை மந்திரி அஹ்ஸான் இக்பால் மீது ஷூ வீசப்பட்டது. அதே போல் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கவாஜா ஆசிப் மீது மை வீசப்பட்டது. இதையடுத்து நான்காவதாக பெண் தலைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று மாலை பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (குலாலாய்) கட்சியின் தலைவியும் தேசிய சபை உறுப்பினருமான ஆயிஷா குலாலாய் மீது இம்ரான் கான் கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.

பகவால்பூர் பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அந்நகரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார் ஆயிஷா குலாலாய். இந்நிலையில், அவர் ஓட்டலிருந்து வெளியே வரும் போது இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் குலாலாய்க்கு எதிராக முழக்கமிட்டு அவரை முற்றுகையிட்டனர். பின்னர் முட்டைகள் மற்றும் தக்காளிகளை வீசியுள்ளனர்.

SCROLL FOR NEXT