செய்திகள்

7 பெண்களை நிர்வாணமாக்கி கொன்றேன்- மூதாட்டி கொலையில் கைதான சைகோ வாலிபர் வாக்குமூலம்

சோளிங்கர் மூதாட்டி கொலையில் கைதான சைகோ வாலிபர் 7 பெண்களை நிர்வாணமாக்கி கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சோளிங்கர்:

சோளிங்கர் அடுத்த தாளிக்கால் கிராமத்தில் தெய்வானை என்ற மூதாட்டி கடந்த மாதம் 16-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அதே கிராமத்தில் சாந்தாம்மாள் என்பவரும் கல்லால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்தார்.

பானாவரம் அடுத்த குன்னத்தூர் கிராமத்தில் சகுந்தலா (வயது 65) என்பவரும் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். இது தவிர ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்தது.

இது குறித்து சோளிங்கர் பாணாவரம் மற்றும் சித்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கலை சேர்ந்த சைக்கோ வாலிபர் முனுசாமி என்பவரை கடந்த மாதம் 22-ந் தேதி ஆந்திர போலீசார் கைது செய்து சித்தூர் ஜெயிலில் அடைத்தனர்.

இந்நிலையில் தாளிக்கால் மூதாட்டி கொலை வழக்கில் முனுசாமியை விசாரிக்க சோளிங்கர் கோர்ட்டில் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மனு அளித்தார். இதையடுத்து இன்று ஒரு நாள் மட்டும் முனுசாமியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் இன்று காலை முனுசாமியை காவலில் எடுத்து விசாரித்தனர். போலீசில் முனுசாமி அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் சிறுவயதில் இருந்தே வீடுபுகுந்து திருடி வந்தேன்.திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததால் யாரும் திருமணம் செய்து கொள்ள பெண் கொடுக்கவில்லை.

இதனால் வெறுப்படைந்த எனக்கு பெண்கள் மீது தீராத ஆசை ஏற்பட்டது. தனியாக இருக்கும் மூதாட்டிகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க செல்வேன். அப்போது மூதாட்டிகளை நிர்வாணமாக்கி ரசிப்பேன். எய்ட்ஸ் பயத்தால் யாருடனும் உடலுறவு கொண்டதில்லை. பெண்களை நிர்வாணமாக்கி விட்டு காயப்படுத்துவேன். இதில் அவர்கள் இறந்து விடுவார்கள்.

தாளிக்கல், குன்னத்தூர், திருவள்ளூர், அம்மூர், ஆந்திராவில் 2 பேர் உள்பட 7 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையை கொலை செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews