செய்திகள்

பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து டெல்லி, மும்பையில் பொதுமக்கள் போராட்டம்

காஷ்மீர் மாநிலம் கத்துவா, உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து டெல்லி, மும்பை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். #SpeakUpIndia

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஆசிபா கொடூரமாக வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் நகரத்தில் 17 வயது இளம்பெண் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பாலியல் புகார் கூறி முதல்வர் அலுவகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

இதனை அடுத்து, அந்த பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் மரணமடைந்தார். நாடு முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ.வை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.