செய்திகள்

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் - காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக காமராஜர் பல்கலைக்கழகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi

மாலை மலர்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி. சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி, துணை சூப்பிரண்டு முத்து சங்கரலிங்கம் விசாரித்தனர்.

அதன்பிறகு விசாரணையில் தொய்வு நிலை காணப்பட்டது. இந்த நிலையில் இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேசுவரி மற்றும் போலீசார் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று மீண்டும் விசாரணை நடத்தினர். #AruppukottaiProfessor #NirmalaDevi