விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பாலியல் ரீதியாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக கடந்த 16-ந் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட பின் இந்த வழக்கு சூடு பிடித்தது.
நிர்மலா தேவி கொடுத்த தகவலின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர்.
வழக்கில் தேடப்பட்டு வந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். இருவரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
மேலும் முக்கிய குற்றவாளியான நிர்மலா தேவியிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதையடுத்து நிர்மலா தேவியை விருதுநகர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்.2) ஆஜர்படுத்த மதுரை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.