செய்திகள்

புரோ கபடி லீக்: குஜராத் அணி வெற்றி

ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், தபாங் டெல்லியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் அறிமுக அணியான குஜராத் வெற்றி பெற்றது.

மாலை மலர்

ஐதராபாத்:

12 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது புரோ கபடி லீக் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஐதராபாத்தில் நேற்றிரவு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், தபாங் டெல்லியை (ஏ பிரிவு) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த மோதலில் அறிமுக அணியான குஜராத் 26-20 என்ற புள்ளி கணக்கில் டெல்லியை சாய்த்தது.

இன்றைய ஆட்டங்களில் குஜராத்-அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8 மணி), தெலுங்கு டைட்டன்ஸ்-பெங்கால் வாரியர்ஸ் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.