செய்திகள்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பிரியா வாரியர் வரவேற்பு

கண் சிமிட்டும் பாடல் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவு ஆறுதலாக உள்ளதாக பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

மலையாள டைரக்டர் ஒமர் லூலு இயக்கத்தில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ஒரு அடார் லவ்.

இதில் இடம் பெறும் மாணிக்க மலராய பூவே என்ற பாடலில் கல்லூரி மாணவி பிரியா வாரியர் நடித்திருந்தார். இதில் சில விநாடிகள் மட்டுமே வரும் காட்சிகள் இண்டர்நெட்டில் வெளியானது. அதில் பிரியா வாரியர் கண் சிமிட்டி முக பாவனைகள் காட்டும் காட்சிகள் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது.

இதனால் படத்தின் டீசரும், பிரியா வாரியரை இணைய தளங்களில் தேடுவோர் மற்றும் பின் தொடர்வோர் எண்ணிக்கையும் பல லட்சங்களை தாண்டியது.

இந்த பாட்டில் இடம் பெற்ற கருத்துக்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை புண்படுத்துவதாக சிலர் தெலுங்கானா மற்றும் மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், படத்தின் இயக்குநர் மற்றும் அக்காட்சியில் நடித்த பிரியா வாரியர் மீதும் குற்றம் சாட்டி இருந்தனர்.

இது தொடர்பான வழக்குகளில் இருந்து தங்களை விடுவிக்குமாறும் மேலும் தங்கள் மீது வழக்கு பதியாமல் இருக்க உத்தரவிட கேட்டும் பிரியா வாரியர், டைரக்டர் ஒமர் லூலு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இப்பிரச்சினை தொடர்பாக பிரியா வாரியர், டைரக்டர் ஒமர் லூலு ஆகியோர் மீதான குற்ற நடவடிக்கைகளுக்கு தடை விதித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு குறித்து நடிகை பிரியா வாரியர் கூறும்போது, இப்பாடல் பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள உத்தரவு அனைத்து சினிமா தயாரிப்பாளர்களுக்கும் ஆதரவான உத்தரவாகும் என்றார்.

எங்கள் படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை எண்ணி, மகிழ்ச்சியில் இருந்தோம். அப்போதுதான் பாடலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டதை அறிந்தோம். இப்பாடல் காட்சியில் நடித்த அனைவருமே மிகவும் இளைய வயதினர். அவர்களையும் வழக்கில் சேர்த்தது வருத்தமாக இருந்தது. இப்போது சுப்ரீம் கோர்ட்டு அளித்த உத்தரவு ஆறுதலாக உள்ளது.

ஒரு அடார் லவ் படத்தில் பிரியா வாரியர் சில காட்சிகளிலேயே நடித்திருந்தார். இப்போது அவருக்கு கூடுதல் காட்சிகள் சேர்த்துள்ளோம். இதற்காக திரைக்கதையை திருத்தி உள்ளோம். விரைவில் இதற்கான சூட்டிங் நடக்க இருக்கிறது. இன்னும் 20 சதவீத காட்சிகளே எடுக்கப்பட வேண்டும். அவை முடிந்ததும், படம் திரைக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

SCROLL FOR NEXT