செல்போன் பறிப்பு 
செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு

கே.கே.நகர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

போரூர்:

சென்னை கே.கே. நகர் பொப்பிலிராஜா சாலையை சேர்ந்தவர் ரமேஷ்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவர் இன்று அதிகாலை அதே பகுதி அண்ணா மெயின் ரோட்டில் செல்போனில் பேசியபடியே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் ரமேஷ்குமாரின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.