மரணம் 
செய்திகள்

சூளகிரி அருகே தனியார் கம்பெனி ஊழியர் மர்ம மரணம்

சூளகிரி அருகே விவசாய தோட்டத்தில் கைகள் கட்டிய நிலையில் தனியார் கம்பெனி ஊழியர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே இம்மடி நாயக்கன்பள்ளியை அடுத்துள்ள திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மகன் திருப்பதி (வயது27). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். விடுமுறைக்காக சொந்த ஊர் திப்பம் பட்டிக்கு திருப்பதி வந்திருந்தார்.

இன்று காலை வீட்டின் அருகேயுள்ள விவசாய தோட்டத்தில் கைகள் கட்டிய நிலையில் திருப்பதி தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக கிடந்த திருப்பதியின் உடலை கீழே இறக்கினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடலை கைப்பற்றி ஓசூர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பதி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT