செய்திகள்

நிர்மலா தேவி மீது சட்டப்படி நடவடிக்கை - சுனில் பாலிவால் உறுதி

பேராசிரியை நிர்மலா தேவி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உயர் கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார்.

சென்னை:

போராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக் கழகமும், கல்லூரி நிர்வாகமும் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், உயர்கல்வி துறை செயலகமும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தி உள்ளனது.

இது தொடர்பாக உயர் கல்வி துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறி இருப்பதாவது:-

பேராசிரியை நிர்மலா தேவி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள போலீசில் புகார் அளிக்க பரிந்துறை செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணைக்கு பின்னர் இந்த விவகாரத்தில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வி‌ஷயத்தில் அவருடன் தொடர்புடையவர்கள் யார்-யார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு சுனில் பாலிவால் கூறியுள்ளார். #tamilnews

SCROLL FOR NEXT