விபத்து 
செய்திகள்

ஆரணி அருகே தனியார் பஸ் மோதி 4 பேர் படுகாயம்

ஆரணி அருகே இன்று காலை தனியார் பஸ் மோதி 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

ஆரணி:

பேரணாம்பட்டிலிருந்து ஆரணிக்கு தனியார் பஸ் இன்று காலை வந்து கொண்டிருந்தது. பஸ்சை டிரைவர் கோபு வயது (45) ஓட்டிவந்தார். ஆரணி அடுத்த ரகுநாதபுரம் கூட்ரோடு அருகே பஸ் வந்த போது டிரைவர் கோபுவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் பஸ் அவர் கட்டுப்பாட்டை மீறி தறிகெட்டு ஓடியது. அப்போது அந்த வழியாக பைக், சைக்கிள் மீது பஸ் மோதி புதருக்குள் சென்று நின்றது.

இதில் கார்த்தி, வெங்கடேசன், பன்னீர்செல்வம், மோகன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.