மரணம் 
செய்திகள்

கோவை மத்திய சிறையில் கைதி மயங்கி விழுந்து மரணம்

கோவை மத்திய சிறையில் இன்று காலை மயங்கி விழுந்த கைதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

சேலம் மேட்டூரை சேர்ந்தவர் மந்தியப்பன் (வயது 55). இவர் கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டிருந்தார். இன்று காலை மந்தியப்பன் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.