சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சி மேலத்தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் மகன் காளிராஜ் (வயது 25). அதே பகுதியில் உள்ள அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தீபா (20). இவர்களுக்கு 4 வயதில் மகனும், ஒரு வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. அதிருப்தியடைந்த தீபா சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காளிராஜ், மனைவி, குழந்தைகளை பல இடங்களில் தேடினார். போலீசிலும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த பலனும் இல்லை.
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த காளிராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் ராஜா, சப்-இன்ஸ் பெக்டர் ராமநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.