செய்திகள்

இளவரசர் ஹாரிக்கும், காதலி மேகன் மார்க்லேவுக்கும் 2018 மே மாதம் திருமணம்: கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பு

பிரிட்டன் இளவரசரான ஹாரிக்கும், அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

மாலை மலர்

பிரிட்டன் இளவரசரான ஹாரிக்கும், அவரது காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, இம்மாத துவக்கத்தில் நிச்சயம் செய்துகொண்டனர்.

ஹாரி, அடுத்த இளவேனிற்காலத்தில் மார்க்கெல்-ஐ  திருமணம் செய்துகொண்டு, லண்டனில் உள்ள கென்சிங்டன் அரண்மனையில் உள்ள நாட்டிங்ஹாம் மாளிகையில் அவரோடு வசிக்கவுள்ளார்.

இவர்களது திருமண நாள் பற்றிய விவரங்கள் சிறிது காலத்திற்கு பிறகு அறிவிக்கப்படும் என கிளாரன்ஸ் ஹவுஸ் நேற்று அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலி மேகன் மார்க்லேவுக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.